ஈழத் தமிழர்களை கொல்ல கருணாநிதி நடத்திய நாடகத்தின் பெயர் உண்ணாவிரதம் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கலந்துகொண்டு, திமுக – காங்கிரஸ் கட்சிகளின் துரோக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர் என்று பெருமையோடு குறிப்பிட்டார். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போரில், சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்ததின் மூலம், தமிழர்களுக்கு திமுக – காங்கிரஸ் கட்சிகள் துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக இலங்கை போருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் உண்ணாவிரதம் இருந்தது, ஈழத் தமிழர்கள் அனைவரையும் கொல்ல நடத்திய நாடகம் என்றும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கடுமையாக சாடினார்.
Discussion about this post