ஈராக்கில் இயல்பான வாழ்க்கை சூழலை உருவாக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ்ரா நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அமைதியாக தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் போராட்டக்காரர்களில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டுமென்று ஈரான் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
Discussion about this post