காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் அந்தப் பகுதி போர்களம் போன்று காட்சியளித்தது. பாலஸ்தீனத்திற்கு சொந்தமான காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்து அமைத்துள்ள ராணுவ வேலிகளை அகற்ற வலியுறுத்தி, பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
,இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படகுகள் மூலம் இஸ்ரேல் ராணுவ முகாம் அருகே சென்று சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்வினையாற்றியது இஸ்ரேல். போராட்டக்காரர்களும் பதிலடி கொடுத்ததால், அந்தப் பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 49 பேர் காயம் அடைந்தனர்.
Discussion about this post