காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்களிலும் இலவச எக்ஸ்ரே பரிசோதனை திட்டம் அறிமுகமாக உள்ளது.
அடுத்த 6 ஆண்டுகளில் காசநோயற்ற சென்னை மாநகராட்சி என்ற நிலையை அடைய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் காசநோயை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காசநோயைக் கண்டறிவதில் எக்ஸ்ரே பரிசோதனை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைந்த அளவே எக்ஸ்ரே பரிசோதனை கருவிகள் உள்ளன.
இதையடுத்து தனியார் ஆய்வகங்களில் பொதுமக்கள் இலவசமாக எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான தொகையை மாநகராட்சி நிர்வாகம், தனியார் ஆய்வகத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் வடசென்னை பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
Discussion about this post