2013 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது, 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் கேவாடியா பகுதியில், நர்மதை ஆற்றின் நடுவில் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்டமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக உயரமான சிலையாக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த சிலையை அமைக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவிலிருந்தும் கட்டட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி பட்டேல் பிறந்த நாளான அக்டோர் 31 ஆம் தேதி, சிலை திறப்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post