தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல், கடந்த 7 மாதத்தில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 1,811 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 38 ஆயிரம் வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 15 ஆயிரம் விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டுள்ளன. இது மொத்த விபத்துகளில் 40 சதவீதமாகும். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு 2வது முறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post