இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் கேரளா!

கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளதால் மக்கள் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளா மழை வெள்ள சேதத்தை சந்தித்து, நிலை குலைந்துள்ளது. 5 ஆயிரத்து 645 முகாம்களில் சுமார் 8 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 8ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வந்த மழை படிப்படியாக குறைந்து வருகிறது. பல இடங்களிலும் வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது.

இதையடுத்து, அப்பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்ததால், ரயில் போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. விமான சேவையும் மீண்டும் துவங்கி உள்ளது.

Exit mobile version