மத உணர்வுகளைப் புண்படுத்தியது தொடர்பான வழக்கில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது, கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம் என்று விமர்சித்து இருந்தார்.
இந்தக் கருத்து, இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, இந்து முன்னணி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
எஸ்.ஏ. சந்திரசேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி பிரகாஷ் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.