SBI வங்கிகளின் ATM கார்டுகள் மூலம் இனி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
இந்தியா முழுவதும் எஸ்.பி.ஐ.க்கு 22,469 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் பின் நம்பர்களை ஃபோனில் கேட்டு, போலி கார்டுகள் மூலம் பணத்தை திருடுவதும், ஏடிஎம் மையங்களிலேயே அப்பாவி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற ஏடிஎம் மோசடிகளைத் தடுக்கவே, பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் இருந்து, ஒரு நாளில் ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைத்துள்ளது.
கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான இந்த புதிய நடைமுறை அக்டோபர் 31முதல் அமலுக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பணம் எடுக்கும் வரம்பை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Discussion about this post