சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றுகாலை வர்த்தகம தொடங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 20 காசுகளாக இருந்தது. பிற்பகலில் 70 ரூபாய் 53 காசுகளுக்கு சரிந்தது. சர்வதேச சந்தையில் இந்திய இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்ததே, ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று இந்திய பங்கு சந்தைகளும் சரிவை கண்டுள்ளன. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 40 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 854 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டியும் 11ஆயிரத்து 712 புள்ளிகளாக சரிந்தது. ஐடி, வங்கிகளின் பங்குகள் மட்டுமே ஏறுமுகமாக உள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமே பங்கு சந்தையின் சரிவிற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post