உலக சுகாதார நிறுவனத்தின் ஆண்டு ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், இந்திய பள்ளிகளில் குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் குறித்த வசதிகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரம், நியாயமான தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புக்களை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய வளர்ச்சியின் இலக்குகள் எட்டப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்டவை கல்வி மற்றும் விழிப்புணர்வை தூண்டுவதற்கான ஒரு நுழைவு புள்ளி என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post