சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, எல்லா துறைகளிலும் இந்தியை திணிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் செயல் என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியால் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தும் கூட, தமிழ்நாட்டில் இந்தியில் பேசுகிறார் என்றும், இந்திக்கு எதிராக தமிழகம் நடத்திய போராட்டங்களை மோடி அறிந்திருக்கமாட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தி மற்றும் ஹிந்துத்துவாவை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக பிரதமர் செயல் படுகிறாரே தவிர, நாட்டின் பன்முகத்தன்மையை காக்கும் பிரதமராக மோடி செயல்படவில்லை என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
Discussion about this post