இந்திய குடியரசு தின விழாவில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.2019ம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில், டோனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்படுவதில், இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றும் எனது நண்பர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்குமாறும் டிரம்ப் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post