இந்தியாவில் 39.3 வினாடிக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது.

குழந்தைகள் மரண விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2017ஆம் ஆண்டு ,ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே 8 லட்சத்து இரண்டாயிரம் குழந்தைகள் இறந்ததாக தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் நிதியம் மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

2016இல் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 8 லட்சத்து 67 ஆயிரமாக இருந்தது. அதே நேரம் கடைசி ஐந்து ஆண்டுகளில் 2017 இல்தான் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனினும் அந்த அறிக்கையின் படி 2017 இல் மட்டும் 39.3 வினாடிக்கு ஒருமுறை ஒரு வயதுக்கும் குறைவான ஓர் இந்தியக் குழந்தை உயிரிழந்துள்ளது .

1990-ல் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டத்தில் இறக்கும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை 1கோடியே 26 லட்சமாக இருந்தது. இது 2017-ல் 54 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் உலகளவில் 50 சதவீத பங்கு வகிக்கும் ஆறு நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது.
இந்திய அரசு சுகாதாரத்திற்க்காக செலவு செய்யும் தொகை மிக குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Exit mobile version