துவக்கத்தில் சிக்கலான மற்றும் ஆபத்துகள் நிறைந்த ராணுவ திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த டிரோன் தொழில்நுட்பம் தற்போது பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிரோன்களின் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், நானோ, மைக்ரோ, ஸ்மால், லார்ஜ் உள்ளிட்ட 5 வகைப்பட்ட டிரோன்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு டிரோனிற்கும் தனிப்பட்ட அடையாள எண் மற்றும் அதன் உரிமையாளருக்கு அனுமதி உரிமம் உள்ளிட்டவை ஆன்லைன் வாயிலாக கொடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்ட காவல்துறையின் உரிய அனுமதி பெற்று டிரோன் பயன்பாட்டை உபயோகிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானநிலையங்கள், கடற்கரைப் பகுதிகள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற வளாகங்கள், தடைசெய்யப்பட்ட இடங்களில் டிரோன் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளில்லா விமானம் வைத்திருப்பவரா நீங்கள் ?
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஆளில்லா விமானம்ஆன்லைன் முன்பதிவுடிச.1டிரோன்
Related Content
சீனாவில் சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு
By
Web Team
August 2, 2019
அச்சுறுத்தும் ட்ரோன்களை அழிக்க, நெதர்லாந்தின் வெர்சன் '2.o' ஸ்டைல்
By
Web Team
December 25, 2018
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு - தொடங்கியது மருந்துக்கடைகள் போராட்டம்
By
Web Team
September 28, 2018
ஆன்லைன் மூலம் மணல் விற்பனை தொடக்கம்
By
Web Team
September 22, 2018