மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரின் உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் மற்றும் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் ஐஓபி வங்கி கிளையின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி ஆகியோர் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகினர். மூவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையை துவக்கி உள்ளார். இந்நிலையில் மறு விசாரணைக்காக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரின் தனி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். தற்போது கலை மற்றும் பண்பாட்டு துறையின் ஆணையராக இருக்கும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை.. அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்
-
By Web Team
- Categories: TopNews, அரசியல், தமிழ்நாடு
- Tags: அப்பல்லோ மருத்துவர்கள்ஆறுமுகசாமி விசாரணைமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
Related Content
ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை
By
Web Team
February 7, 2019
ஜெயலலிதாவின் மறைவு குறித்துப்பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது : செல்லூர் ராஜூ
By
Web Team
February 1, 2019
“ஜெயலலிதாவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினோம்.. ஆனால்..?”
By
Web Team
September 28, 2018
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ நிர்வாகம்
By
Web Team
September 20, 2018
வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என்று சொன்னவரிடம் இன்று விசாரணை!
By
Web Team
September 7, 2018