இந்திய கிரிக்கெட் வாரியம், தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆர்டிஐ வரம்புக்குள் வருவதாக மத்திய தகவல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரையில் எந்த தகவலையும் அளித்ததில்லை.இந்த நிலையில்
இந்திய சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய விளையாட்டு அமைச்சக தகவல் அதிகாரியின் அறிக்கை உள்ளிட்டவற்றை மத்திய தகவல் ஆணையம் ஆராய்ந்தது. அதன் அடிப்படையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(ஹெச்) நிபந்தணைகளை பிசிசிஐயின் செயல்பாடுகள் பூர்த்தி செய்வதாக தகவல் ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது.
இதன்மூலம், ஆர்டிஐ சட்டத்தின்படி தகுந்த மத்திய பொது தகவல் அதிகாரிகள், மத்திய துணை பொது தகவல் அதிகாரிகள், முதல்நிலை மேல்முறையீட்டு அமைப்பு உள்ளிட்டவற்றை நியமிக்குமாறு பிசிசிஐயின் தலைவர், செயலர் மற்றும் நிர்வாகக் குழுவை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்கள்கள் பெற இணையதளம் மற்றும் அலுவல் விண்ணப்பங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை 15 நாட்களில் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post