ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் போராடி வென்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்களை எடுத்தது. ரஹமத் ஷா 36 ரன்களும்,அஸ்கர் ஆப்கான் 67 ரன்களும் எடுத்தனர்.சிறப்பாக ஆடிய ஹஷ்மதுல்லா ஷகிதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடத் தொடங்கியது.
49.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 258 ரன்களை குவித்தது .சோயப் மாலிக் 51 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.