ஆன்லைன் மூலம் ஓட்டுனர் உரிமத்துக்கு பணம் கட்டலாம்- கால விரயம் தவிர்ப்பு

 

ஆன்லைனில் ஓட்டுனர் உரிமத்துக்கு பணம் கட்டும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 1 ம் தேதி முதல் முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப்
பணிகளுக்கான கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ,பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்ற சேவைகளுக்கு மனுதாரர்கள் தங்கள்
இருப்பிடத்திலிருந்து கொண்டே கட்டணம் செலுத்தலாம். மனுதாரர்கள் நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பயன் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வங்கி இணைய சேவை , டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தலாம். அல்லது இணையதளம் மூலம் ரசீதை
உருவாக்கி அதை அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று தகுந்த தேர்வில் கலந்து கொண்டு, உரிமத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம், மனுதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்துவதால் கால விரயமும், பொதுமக்கள் அலுவலகங்களில் காத்திருப்பதும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version