ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் 50 வது ஆண்டு விழா, மதுரை செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய பாடுபட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்,கீழடியில் நடக்கும் 4 ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் செப்டம்பர் 30 ம் தேதி முடிவடையும் என்றார்.கீழடி அகழ்வாய்வு அறிக்கையினையும், 15 ஆண்டுகள் வெளிவராமல் உள்ள ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு அறிக்கையினையும் வெளியிட மத்திய அரசை கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கீழடி, ஆதிச்சநல்லூர்,அழகன்குளம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் தெரிவித்தார்.
Discussion about this post