அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் பிரிவு காலிறுதி சுற்றில், ஸ்பெயின் வீரரான ரஃபேல் நடால், ஆஸ்திரிய வீரர் டோம்னிக் தீமை எதிர்கொண்டார். முதல் செட்டில் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த நடால், உத்தியை மாற்றி ஆட்டத்தை தொடர்ந்தார். அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 7-5 என்ற கணக்கில் வென்ற அவர், கடைசி செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். 4 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டம், ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் – செக் குடியரசின் கரோலினா பலீஸ்கோவாவை எதிர்கொண்டார். 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற செரினா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
Discussion about this post