டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை ஆளும் பாஜக அரசு இரட்டிப்பாக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றார். தவறான பிரசாரத்தை பாஜக முன்னெடுப்பதாவும் அவர் குற்றம்சாட்டினார். அதற்கு வேளாண் வளர்ச்சி விகிதம் 14 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் மன்மோகன் தெரிவித்திருந்தார். இதற்கு ட்விட்டரில் தனது பதிலை தெரிவித்துள்ள அருண் ஜெட்லி, விவசாயம், கிராமம் மற்றும் சமூகத்திற்காக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் முதலீடு செய்ததை ஒப்பிட்டாலே பாஜக அறிவித்ததற்கான காரணம் தெரியும் என்று மறைமுகமாக சாடியுள்ளார். விவசாய துறையின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அருண்ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
Discussion about this post