பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து பல கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு, அதை திருப்பி செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பினார். அமெரிக்காவில் உள்ள நீரவ் மோடியின் சொத்துகள் விற்கப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மீது பஞ்சாப் நேசனல் வங்கிக்கும் உரிமை அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய கார்பரேட் நிறுவனங்களுக்கான அமைச்சகம் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை மேற்கொண்ட அமெரிக்க நீதிமன்றம், நீரவ் மோடியின் அமெரிக்க சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மீது உரிமைகோர பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post