அமெரிக்காவால் ஈரான் தொடர்ந்து பொருளாதார அச்சுறுத்தலை எதிர் கொண்டு வருவதாக அந்நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், ஈரான் மக்கள் மிகவும் உணர்வுப்பூர்வமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். அமெரிக்காவின் பொருளாதார அச்சுறுத்தலை ஈரான் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் அதிபரான பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது .மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இதனால் மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் ஈரான் மக்களை பாதித்து வருகிறது. இதனிடையே ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post