அமெரிக்காவை கண்டு பயமில்லை- அடுத்தடுத்து அதிரடி காட்டும் இந்தியா

 

அமெரிக்காவின் தடையையும் மீறி ஈரான் நாட்டிலிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை நவம்பர் மாதத்தில் இந்தியா இறக் குமதி செய்ய உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொரு ளாதார தடை விதித்துள்ள நிலை யில், பிற நாடுகளும் இதை கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான தடையானது வரும் நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் ஈரானில் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 60 லட்சம் பேரல்களும், மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் 30 லட்சம் பேரல்களும் இறக்குமதி செய்கின்றன.

ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவை எச்சரித்து இருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எஸ் 400 ரக ஏவுகணைகளுக்கு இந்தியா ஆர்டர்கொடுத்து விட்டது. இந்த நிலையில் ஈரானிடம் இருந்து அடுத்த மாதமும் இந்தியா எரிபொருள் வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version