கடந்த இரண்டு தினங்களாக ட்வின் சிட்டியில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. நாலடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகனங்களை இயக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.