குற்றங்களை கண்காணிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று, தெற்கு ரயில்வே உதவி கோட்ட மேலாளர் மனோஜ் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோஜ், சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருவதாகவும், 6 மாதத்தில் இந்தப் பணி நிறைவு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.