அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி சுவீடன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்புக் கருவிகள் வாங்கியதற்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்துக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் 550 கோடி ரூபாயை செப்டம்பர் 30 ஆம் தேதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் உறுதியளித்ததாகக் கூறப்பட்ட நிலையில், குறிப்பிட்ட தேதியில் 550 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதன்படி, ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவனத்தின் இரு நிர்வாகிகளும் நீதிமன்ற அனுமதி இன்றி, நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post