அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள்

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகளவில் அதிகம் ஊதியம் பெறும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் வரையிலான நடிகர்களின் வருமானத்தைக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆயிரத்து 676 கோடி வருமானத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி (george clooney ) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக பிரபல ரெஸ்லிங் வீரரும் நடிகருமான த ராக் என அழைக்கப்படும் டிவெய்ன் ஜான்சன் (dwayne johnson) இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் 284 கோடி வருமானத்துடன் ஏழாவது இடத்திலும், 270 கோடி ரூபாய் வருமானத்துடன் சல்மான் கான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.

Exit mobile version