ஸ்டாலினுக்கு துணைபோகும் டிடிவி தினகரன் – அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் மு.க ஸ்டாலினுக்கு, டிடிவி. தினகரன் துணை போவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.

திருவாரூரில், அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் காமராஜ், மக்களின் அடிப்படை தேவைகளை அதிமுக அரசு முழுமையாக நிறைவேற்றி வருவதாகக் கூறினார்.

எண்ணற்ற திட்டங்களை தந்த அ.தி.மு.க மட்டுமே அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் முழு தகுதியை பெற்று இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதலமைச்சர் பதவிக்கு வந்து விடலாம் என்று, ஸ்டாலின் ஆசைப்பட்டதாகவும், இதற்காக அவர் மேற்கொள்ளும் தவறான முயற்சிகளுக்கு டி.டி.வி. தினகரன் துணையிருப்பதாகவும் காமராஜ் குற்றம்சாட்டினார்.

தி.மு.க .எத்தனை துரோகிகளை அழைத்துக் கொண்டு வந்தாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version