விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது!

விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில், விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கான மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்திய கிரக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் விளையாட்டில் விராட் கோலி இந்த விருதைப் பெறுகிறார்.

மேலும், காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தியான் சந்த் விருது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற பலரும் இடம் பெற்றுள்ளனர்.

Exit mobile version