வசூலை குவிக்கும் "ஏ ஸ்டார் ஈஸ் பார்ன்"!

வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் “ஏ ஸ்டார் ஈஸ் பார்ன்” படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என்று அமெரிக்க பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“ஏ ஸ்டார் ஈஸ் பார்ன்” படம் முதன்முதலில் 1937 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு 3 ஆஸ்கர் பரிசை வென்றது. பின்னர் இக்கதையை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டன. இப்படத்தை மீண்டும் இயக்கி நடிக்க கூப்பர் முடிவு செய்து முன்னணி நடிகர்களை அணுகிய போது, அவர்கள் நடிப்பதற்கு முன்வரவில்லை. இந்தநிலையில் கூப்பருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஏலி நடித்த இப்படம் அமெரிக்க பட உலகில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. கூப்பர் மற்றும் ஏலியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தின் இசை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. காதலியை காதலன் பாடகியாக்குவதே கதையின் மையக்கருத்தாகும். நடிகர்களாக இருந்து இயக்குநர்களாக பரிணமித்து, வெற்றி வாகை சூடி, ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றவர்கள் 4 பேர் மட்டுமே. சார்லி சாப்ளின் , கிளிண்டி ஈஸ்ட் வுட், பென் அஃப்லெக், மெல் கிப்ஸ்சன் ஆகியோர் ஆவர். அந்த வரிசையில் “ஏ ஸ்டார் ஈஸ் பார்ன்” படம் மூலம் இணைந்துள்ளார் கூப்பர். இந்தப் படத்திற்கு கண்டிப்பாக 3 ஆஸ்கார் விருதுகள் கிடைக்கும் என்று அமெரிக்க பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version