ரூ. 15 லட்சம் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சூரியகலாவுக்கும், மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நாளை (12-ந்தேதி) மணப்பாறையில் நடைபெறுவதாக இருந்தது. அருண்குமார் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் அருண்குமார், சூரியகலாவிடம் தனக்கு 15 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம், இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அருண்குமார் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சூரியகலா, மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ,நாளை நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

Exit mobile version