புறா மணி கொலை வழக்கு – 6 பேர் கைது

சென்னையில் கொள்ளையன் புறாமணி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த புறா மணியின் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 13ம் தேதி வானகரம் மீன்சந்தை அருகே புறாமணி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் நெற்குன்றத்தைச் சேர்ந்த சுல்தான், நாகராஜ், அரவிந்த், அருண், ஆனந்த், விக்கி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version