பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில், பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கர், கணபதி, வர்ஷா, ஸ்வேதா ஆகியோர் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூங்கொத்து கொடுத்தும், கட்டி அனைத்தும் உறவினர்கள், நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாய் மரப்படகு போட்டியின் ஆண்கள் பிரிவில் வருண் தக்கர், கணபதி, ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் வர்ஷா மற்றும் ஸ்வேதா ஆகியோர், வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

Exit mobile version