நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version