திமுகவிற்கு, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச என்ன தகுதியுள்ளது: கடம்பூர் ராஜூ

1996-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை ஆரம்பித்த திமுகவிற்கு, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச என்ன தகுதியுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பசுவந்தனை, எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டவர்களுக்கு, பொது மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலையை ஆரம்பித்து, அதனை விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தது ஸ்டாலின்தான் என குற்றம்சாட்டினார்.

Exit mobile version