தாமதிக்காமல் நடவடிக்கை – ஆளுநருக்கு வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்டோரை காலம் தாழ்த்தாமல் விடுவிக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் ஏற்கனவே காலதாமதமாகி விட்டது. எனவே தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

12 லட்சம் கோடி ரூபாய் வாரக்கடன் பட்டியலை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக ரகுராம்ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், அந்த அறிக்கையை பிரதமர் அலுவலகம் ஏன் இதுவரை மறைத்து வைத்தது என்பதை விளக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மோடி அரசு மோசடி பேர்வழிகளை காப்பற்றும் அரசாக உள்ளது என்பதற்கு ரகுராம்ராஜனின் அறிக்கை சான்று என்று குற்றம்சாட்டிய திருமாவளவன், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version