தலைமறைவான நிலானி..?

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை நிலானியை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நிலானி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், காந்தி லலித்குமார் என்பவருக்கும் நிலானியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக நிலானி போலீசில் புகார் அளித்தார். இதனால், மனமுடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக நிலானியும் தானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டார். இந்தநிலையில், காந்தி லலிக்குமாரின் தவறான பழக்கத்தால், அவரை தான் பிரிந்ததாக நிலானி பேட்டியளித்தார். இதனிடையே கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்து நிலானி சிகிச்சை முடிந்து திரும்பினார். ஆனால், அவர் வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version