தமிழகத்தில் 6இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க முடிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ஆம் தேதி காலமானார். இந்தநிலையில், வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாஜ்பாயின் அஸ்தியை பாஜக மாநிலத் தலைவர்களிடம் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் ஒப்படைத்தார். வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் 6இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க இருப்பதாக கூறினார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டு, நாளை மறுநாள் அஸ்தி கரைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version