சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர் மற்றும் கொளத்தூரிலும் பலத்த மழை பெய்து இருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.