காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு – தலைவராக ப. சிதம்பரம்

மக்களவை தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளை பாஜகவும், காங்கிரசும் முடுக்கி விட்டுள்ளன.

கடந்த மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், இந்த முறை அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக ப. சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சோனியா, ராகுலின் வழிகாட்டுதலின் படி இந்தக் குழு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்களை நலத்திட்டங்களை பரிசீலித்து, அதற்கு ஏற்றவாறு சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version