கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பிலுகுண்டுலுவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5,000 கனஅடியிலிருந்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 1000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 200 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 102.32 அடியாகவும், நீர்இருப்பு 67.88 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

இதேபோல் பவானி சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 6462 கனஅடியில் இருந்து 8973 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 101.85 அடியாகவும், நீர்இருப்பு 30 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version