இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடரும் – ஈரான் திட்டவட்டம்

 

இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடரும் என ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என இந்தியாவையும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடு பொதுச் சபை கூட்டத்தின் போது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித் ஃஸாரிஃப், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஜாவித் ஃஸாரிஃப், பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆகியன இந்தியாவுடன் தொடரும் என்றார். இந்திய நண்பர்களுடனான ஈரானின் நல்லுறவு என்றும் நிலைத்திருக்கும் என்று கூறிய அவர், சுஸ்மா ஸ்வராஜும் இதே கருத்தை பிரதிபலித்ததாக தெரிவித்தார்.

Exit mobile version