யுவராஜ் சிங்கிற்கு இன்று 38-வது பிறந்த நாள்: வீரர்கள் வாழ்த்து

38-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு, சேவாக், சச்சின் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக்-அவுட் டிராபியில் தான் தனது முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். சச்சின், கங்குலி என பல ஜாம்பவான்களுக்கு நடுவே விளையாடிய யுவராஜ் சிங், 80 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த போட்டியில் இவரின் அதிரடியால் இந்தியா வெற்றி பெற்றது.

முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். விராட் கோலி, சச்சின், கங்குலி ஆகியோரை அடுத்து அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளார். மொத்தமாக 27 முறை கைப்பற்றியுள்ளார்.

304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள யுவராஜ் சிங் 8701 ரன்கள் எடுத்துள்ளார். 14 சதம், 54 அரைசதம் அடங்கும். இதேபோல், 40 டெஸ்ட் போட்டியிலும் விளையாடி உள்ளார். டி20 போட்டியில் 1,177 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 8 அரை சதங்கள் அடித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடிய யுவராஜ் சிங், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவர் முழுவதையும் சிக்சருக்கு அடித்து தூள் கிளப்பினார். சர்வதேச போட்டிகளில் யுவராஜ் சிங் அடித்த அந்த 6 சிக்சர்களே இதுநாள் வரை சாதனையாக நீடித்து வருகிறது. அந்த உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றது.

இதேபோல், இந்திய ரசிகர்களின் 50 ஓவர் உலகக் கோப்பையை நனவாக்கியவர்களில் ஒருவர் யுவராஜ் சிங். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய யுவராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ், மருத்துவ சிகிச்சைக்காக போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். அதன்பிறகு, சர்வதேச போட்டிகளில் களமிறங்கினாலும், பழைய ஆட்டத்தை அவரால் தொடர முடியவில்லை. இதனால், கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங், தொடர்ந்து ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருவது ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காமல் இடம்பெற்றுள்ளார்.

யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்….

 

 

 

Exit mobile version