பூனையை மைக்ரோ ஓவனில் வைத்து கொடுமைப்படுத்திய இளைஞர்கள்

பிரான்ஸ் நாட்டில் பூனையை மைக்ரோவேவில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள  டன்கிர்க் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது …அதில் இரு இளைஞர்கள் பூனை ஒன்றினை மைக்ரோவேவில் வைத்து கொடுமைப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்..

இந்த வீடியோ வைரலாக பரவ டன்கிரீட் நகர விலங்குகள் நல அமைப்பு இளைஞர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து பூனையைக் காப்பாற்றி உள்ளனர்.

ஆனால் இளைஞர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு அந்த இளைஞர்கள் விடுத்த கொலை மிரட்டலை தொடர்ந்து இந்த வீடியோவானது இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. மேலும் இளைஞர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்..  அந்த இளைஞர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தகவல் வெளியாகி உள்ளது..

Exit mobile version