கடல் பொருட்களை OLX-ல் விற்க முயன்ற இளைஞர்கள் கைது

ஈரோடு மாவட்டத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் பொருட்களை ஓஎல்எக்ஸ்.யில் விற்க முயன்ற இளைஞர்களை மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.

பவளபாறைகள், கடல் விசிறி உள்ளிட்ட பல்வேறு கடல் பொருட்களை ஓஎல்எக்ஸ்.யில் விற்பனை செய்வதாக சிலர் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு மற்றும் வன உயிரின சரக அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டது ஈரோடு மாவட்டம் கணபதி பாளையத்தை சேர்ந்த வீரராஜ்குமார் மற்றும் நகுலேசன் என்பது தெரியவந்தது.

விசாரணையில் இருவரும் தூத்துக்குடியில் இருந்து இந்த கடல் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version