தேனி மாவட்டம் கம்பம் அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாயமான நிலையில், இதுகுறித்து அவரது தந்தை கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சுருளியில் பூசாரி ஒருவர் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீசார், வழக்கு தொடர்பாக பழைய குற்றவாளிகள் அஜித், பிரவீன் என்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனோஜ்குமாரின் கூட்டாளிகள் இவர்கள் என்பதும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மனோஜ்குமாரை கொலை செய்து புதைத்ததும் தெரியவந்தது.
கொலை செய்து புதைக்கப்பட்ட மனோஜ்குமாரின் உடலை வட்டாட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டியெடுத்து உடற்கூறுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அஜித், பிரவீனிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.