இன்றும் எங்களுக்கு நீங்க தான் dream girl : வைரலாகும் சிம்ரனின் டான்ஸ் வீடியோ

நடிகை சிம்ரன் என்றாலே ’அட ஆள்தோட்ட பூபதி நானடா ‘ என்ற பாடலில் அவர் நடனமாடும் பெல்லி டான்ஸ் தான் ஞாபகத்திற்கு வரும்.90’s கிட்ஸ் அனைவருக்குமே கனவு கன்னியாக இருந்தவர்.மேலும் தல, தளபதி இருவருடனும் இவர் ஜோடி போட்டு நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் அன்று சிம்ரனுக்கு ரசிகர்களிடம் என்ன வரவேற்பு இருந்ததோ, அதே அளவிற்கு சிம்ரனை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.சமீபத்தில் விருது விழாவில் ஒரு முறை கலந்துக்கொண்ட சிம்ரனிடம் நடிகை ப்ரியா பவானி சங்கர் ’உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறிய செய்திகளும் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் சிம்ரன் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் ‘நடனம் உங்கள் கவலையை போக்கும்,  நடனத்தோடு ஒன்றி ஆடும்போது அதன் இசையில் மூழ்கி உடல் தானாக வலைந்து கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.  வயசானாலும் உன் ஸ்டைலும்,அழகும் குறையவே இல்ல என்ற டயலாக்கை போல இவரின் நடனத்தை  பார்த்த ரசிகர்கள் ‘இன்றும் நீங்கள் தான் எங்களுக்கு dream girl என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version