முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ‘தர்மபிரபு’ – எமனாக நடிக்கும் யோகிபாபு

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக , முதன்முதலாக இப்படத்தைத் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

இப்படத்தை முத்துகுமரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விமல் நடித்து
வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.

டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version